search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது- அமைச்சர் ரகுபதி
    X

    தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது- அமைச்சர் ரகுபதி

    • அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
    • பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * அ.தி.மு.க கலகலத்து போயுள்ளது.

    * தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது.

    * தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது.

    * 2026 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் தான் ஈரோடு கிழக்கு வெற்றி

    * கருத்துக்கணிப்புகளில் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுவது கண்கூடாக தெரிகிறது.

    * இப்போது தேர்தல் வைத்தாலும் திமுக கூட்டணி வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

    * எதிரிகள் ஒன்று சேர்ந்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியை வீழ்த்த முடியாது.

    * எதிரிகளே இல்லை என்று திமுக அரசு என்றுமே சொல்லவில்லை. எதிரிகளுக்கும் வாக்கு வங்கியுள்ளது என்றே சொல்கிறோம்.

    * அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்து நம்பிக்கை இழந்து வருகிறது.

    * சில சம்பவங்களை மிகைப்படுத்தி கூறினாலும் மக்கள் தமிழகத்தில் மகிழ்ச்சியாக உள்ளது தெளிவாகிறது.

    * ஆட்சியில் தவறுகள் தெரியவந்தால் உடனுக்குடன் முதலமைச்சர் சரிசெய்து வருகிறார்.

    * ஆட்சியில் உள்ளோர் மீது குற்றம்சாட்டுவது இயல்புதான். ஆனால் முதலமைச்சர் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறார்.

    * செங்கோட்டையன் அதிமுகவின் சீனியர்தானே அதனால்தான் அவ்வாறு பேசியுள்ளார்.

    * அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.

    * பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

    Next Story
    ×