என் மலர்
தமிழ்நாடு

X
GETOUT வார்த்தைக்கு உகந்தவர் பிரதமர் தான்- அமைச்சர் சேகர்பாபு
By
மாலை மலர்21 Feb 2025 8:30 AM IST

- அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன்,
- நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம், செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது?
சென்னை :
என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன், வரக்கூடாது என்றால் அது என்ன ரெட் லைட் ஏரியாவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து, இன்று அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம், செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது? மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் ரெட் லைட் ஏரியா என சொல்வது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.
GET OUT என்ற வார்த்தைக்கு உகந்தவராக இருப்பவர் பிரதமர் மோடி தான் என்றார்.
Next Story
×
X