என் மலர்
தமிழ்நாடு

சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

- டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது.
- மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.
சென்னை:
மதுபான முறைகேடு புகார் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* திமுக ஆட்சியின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக்கில் சோதனை நடைபெற்றது.
* எந்த ஆண்டு போடப்பட்ட FIR என்பது பற்றி அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
* மதுபான டெண்டர்களில் எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை.
* டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் டெண்டர்களாக மாற்றப்பட்டுள்ளது.
* பணியிடமாற்றம் பொறுத்தவரையில் எந்த தவறும் இல்லை. பணியிடமாற்றம் அவர்களது குடும்ப சூழலை பொறுத்தது.
* ரூ.1,000 கோடி முறைகேடு என பொத்தம்பொதுவாக குறைகூறுவதை ஏற்க முடியாது.
* ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக முன்னதாக ஒருவர் கூறுகிறார், பின்னர் அமலாக்கத்துறை சோதனை செய்துவிட்டு அதையே கூறுகிறது.
* டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது.
* மதுபான கொள்முதலில் எந்தவிதமான சலுகைகளும் காட்டப்படவில்லை.
* அமலாக்கத்துறையின் வழக்குகள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும்.
* பட்ஜெட் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்க நேற்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
* ஏற்கனவே இருந்த கடைகளில் 500 கடைகளை நாம் மூடியுள்ளோம்.
* அரசின் மீது அவதூறை பரப்ப வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடுகிறது.
* ஊழியர் தவறு செய்தால் அவர்மீது நடவடிக்கை எடுத்தால் அது தவறா?
* தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற கோஷம் மக்களின் கோஷமாக மாறியுள்ளது என்றார்.