search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முகுந்தன் விவகாரம்: ராமதாஸை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி - கேள்விகளுக்கு பதில்
    X

    முகுந்தன் விவகாரம்: ராமதாஸை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி - கேள்விகளுக்கு பதில்

    • மக்கள் விரோத ஆட்சியை அகற்றவேண்டும் என்ற பொதுக்குழு தீர்மானம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள், செயல்திட்டங்கள் குறித்து ஐயா தலைமையில் விவாதித்தோம்
    • நேற்று நடந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்

    விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

    அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே மேடையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார். இதற்கிடையே கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது. சமாதான பேச்சுவார்த்தைக்கு அன்புமணி பல நிபந்தனை விதித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

    சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கட்சியின் வளர்ச்சி பற்றியும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், ஜாதிவாரி கணக்கெடுப்பு, [வன்னியர்களுக்கு] 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு, விவசாய மாநாடு, போராட்டங்கள் பற்றியும் பேசினோம்.

    மக்கள் விரோத ஆட்சியை அகற்றவேண்டும் என்ற பொதுக்குழு தீர்மானம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள், செயல்திட்டங்கள் குறித்து ஐயா தலைமையில் விவாதித்தோம் என்று தெரிவித்தார்.

    நேற்று நடந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கட்சி ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் எல்லா கட்சியிலும் நடப்பதுதான், எங்களுக்கு ஐயா, ஐயா தான், எங்கள் உட்கட்சி பிரச்சனையைப் பற்றி நீங்கள் பேச எதுவும் தேவை இல்லை, அது எங்கள் பிரச்சனை, நாங்கள் பேசிக்கிறோம் என்று தெரிவித்து விடைபெற்றார்.

    Next Story
    ×