search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முற்றுகை போராட்டம் அறிவிப்பு எதிரொலி- சீமான் வீட்டு முன்பு குவிந்த நா.த.க.வினர்
    X

    முற்றுகை போராட்டம் அறிவிப்பு எதிரொலி- சீமான் வீட்டு முன்பு குவிந்த நா.த.க.வினர்

    • காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
    • சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

    மேலும், காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 22-ந்தேதி சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாகவும், முற்றுகை போராட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் பங்கேற்கவும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்நிலையில் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர்.

    சர்ச்சை பேச்சுக்கான ஆதாரத்தை எங்கு காண்பிக்க வேண்டுமோ அங்கு வெளிப்படுத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×