search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை- அண்ணாமலைக்கு நத்தம் விஸ்வநாதன் பதில்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை- அண்ணாமலைக்கு நத்தம் விஸ்வநாதன் பதில்

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை.
    • எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.

    சிவகங்கையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அவர் எங்களை சொல்லவில்லை.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை. எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.

    * இவர் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதைப்பற்றி கண்டு கொள்ளவும் இல்லை என்று கூறினார்.

    Next Story
    ×