என் மலர்
தமிழ்நாடு

X
கோவில் திருவிழா: எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
By
மாலை மலர்11 March 2025 5:22 PM IST

- தங்கள் தலைமையில்தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.
- கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும உரிமை உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஜமீன் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை நடத்தக்கோரி பரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "தங்கள் தலைமையில்தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.
கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும உரிமை உள்ளது. திருவிழா குறித்து ஆண்டுதோறும் அமைதிப் பேச்சவார்த்தை நடத்த தேவையில்லை" எனத் தெரிவித்தது.
Next Story
×
X