என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![TNPSC இல்லை.. DMKPSC..!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் TNPSC இல்லை.. DMKPSC..!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9163133-jayakumar.webp)
TNPSC இல்லை.. DMKPSC..!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது.
- குரூப் 2 மற்றும் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள ஆயிரத்து 540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20 தேதி வெளியிட்டது.
இந்த குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் என 534 பணியிடங்கள் அடங்கும்.
அதேபோல் குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், 273 காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 5 லட்சத்து 81ஆயிரத்து 305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், குரூப் 2ஏ வினாத்தாளில் 88வது கேள்வியில் "தமிழ்நாட்டில், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக, முதலமைச்சரை, மக்கள் "தாயுமானவர்" என்று அழைக்கின்றனர் என கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு விடையாக 5 ஆப்ஷன்கள் இடம்பெற்றது. அ) பள்ளியில் காலை உணவு, ஆ) விடியல் பயணத் திட்டம், இ) நீங்கள் நலமா ஈ)மக்களுடன் முதல்வர் உ) விடை தெரியவில்லை.
இதில் தேர்வர்கள் சரியான பதிலை தேர்வு செய்து நிரப்ப வேண்டும். தற்போது இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் முதல்வர் கொண்டு வந்த திட்டம் குறித்த கேள்வியை விமர்சித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," TNPSC இல்லை, DMKPSC" என்று குறிப்பிட்டுள்ளார்.