என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/8994688-chennaicorporation.webp)
X
முறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ்
By
மாலை மலர்6 Feb 2025 9:38 AM IST (Updated: 6 Feb 2025 10:39 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
- கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டடங்கள், அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் நோட்டீஸ் அனுப்பியும் சொத்து வரி செலுத்தாதோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முறையாக சொத்துவரி செலுத்தாத நபர்களுக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சொத்துவரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு க்யூ ஆர் குறியீடு உடன் கூடிய நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வரியை செலுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
X