search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியாரை ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டு காலத்திற்கேற்ப சீமான் செயல்பட வேண்டும்- நா.த.க. நிர்வாகி
    X

    பெரியாரை ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டு காலத்திற்கேற்ப சீமான் செயல்பட வேண்டும்- நா.த.க. நிர்வாகி

    • பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
    • ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திணிக்கிறது.

    பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * சீமான் பேச்சு இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுமே தவிர தமிழ் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.

    * ஆரியம், இந்துத்துவா, இந்தி, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் நோக்கம்.

    * தமிழீழத்தையும் பிரபாகரனையும் தமிழ்மொழியையும் இந்துத்துவாவினர் ஏற்றுக்கொள்கிறார்களா?

    * பெரியாரியவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்பதை இந்துத்துவாவாதிகள் எதிர்க்கிறார்கள்.

    * பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.

    * ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. திணிக்கிறது.

    * நாம் தமிழர் கட்சி தொடங்கியதும் அரவணைத்தவர்கள் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிஸ்டுகள் தான்.

    * திராவிடம், பெரியாரை ஒழிக்கும் திட்டத்தை கைவிட்டு காலத்திற்கேற்ப சீமான் செயல்பட வேண்டும்.

    * பகைவர் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு சீமான் கைகோர்த்து தமிழ் தேசியம் வெல்ல கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

    Next Story
    ×