search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நான் போய் மன்னிப்பு கேட்க வருண் குமார் டிஐஜி அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?- சீமான் ஆவேசம்
    X

    நான் போய் மன்னிப்பு கேட்க வருண் குமார் டிஐஜி அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?- சீமான் ஆவேசம்

    • நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம்.
    • குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.

    டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்ற வருண்குமார் கூறுகையில் "சீமான் தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக தொழிலதிபர் ஒருவர் மூலமாக தூது விட்டார். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் கோர்ட்டில் அதை தெரிவிக்கட்டும். சீமான் இனிமேல் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சீமான் மீது தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அடுத்தகட்டமாக சிவில் வழக்கு தொடர இருக்கிறேன். சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தருவேன். என்னை மிரட்டி பார்க்க முடியாது. அதற்கான ஆள் நான் இல்லை" என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக சீமானிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் அளித்த பதில் பின் வருமாறு:-

    எனக்கும் அண்ணனுக்கும் இடையில் பிரச்சனை வேண்டாம். எல்லோரையும் அனுப்பி முடித்து விடுங்கள் என சொன்னது நீ. நான் எதற்கு அவரிடம் போய் பேசனும்.

    கொலை மிரட்டல் விடுப்பதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்ப...

    நீதான் பெரிய அப்பா டக்கர்... இவராச்சே... துப்பாக்கி, பட்டாலியன் வைத்திருக்கியே... எனக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்வது கேவலமாக இல்ல...

    நீ சரியான ஆண் மகனாக இருந்தால் எனக்கு தண்டனை பெற்றுக்கொடு... குடுத்துடு பார்த்திடுவோம். குற்றவாளி நீ.. காக்கிச் சட்டையில் மறைந்து இருக்கிறாய்.

    நீ செல்போன் திருடன்... ஆடியோ திருடன்... 14 செல்போன்களை திருடி ஆடியோவை வெளியிட்டவன் நீ... ஆடியோவை வெளியிட்ட அயோக்கிய பயன் நீயா.. இல்லையா?...

    அரசியலோடு மோத துப்பில்லாமல் அவனை முன்னால் நிறுத்தி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்...

    அவருக்கு உடனடியாக ஏன் டி.ஐ.ஜி. பிரமோசன். எல்லோருக்கும் பணி மாறுதல். இவருக்கு மட்டும் ஒரே இடத்தில். என்னை என்ன பண்ணிடுவே...

    தமிழ் மக்களுக்காக போராடும் என்னை பிரிவினைவாதி எனக் கூறுகிறார். இது போலீஸ்காரன் வேலையா... அரசியல் கட்சி தலைவர் மாதிரி எப்படி பேட்டி கொடுக்கிறாய். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட என்னைப் பற்றி பேச மாட்டார்கள். பேசாம மாவட்ட செயலாளர் பதவியை வாங்கி கட்சியில் சேர்ந்துவிட வேண்டியதுதானே...

    நீங்கள் பேசுங்க... அவரை ஏன் முன்னாடி நிறுத்துகிறீர்கள். நான் போய் மன்னிப்பு கேட்க அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?

    அவர் ஏதோ காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு... மன்னிப்பு கேட்பது பரம்பரையிலேயே கிடையாது. நான் மன்னிப்பு கேட்க முதலில் நீ யாரு,.. தவறு செய்தது நீ... தொழிலதிபர் யார்? அவரை கூட்டிக்கொண்டு வா...

    பத்திரிகையாளர்களை விட்டு, உயர் காவல் அதிகாரிகளை விட்டு நீ கெஞ்சின...

    இவ்வாறு சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

    Next Story
    ×