என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்! - ஓ.பி.எஸ். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்! - ஓ.பி.எஸ்.](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9224396-opanneerselvam.webp)
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்! - ஓ.பி.எஸ்.
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
- தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது. அ.தி.மு.க. உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்.
இந்த நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மூலமாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின்படி, நீதிமன்றத்திற்கு எந்தெந்த அதிகாரங்கள் இருக்கிறதோ.. அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என்பது அந்த மனுவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று வழங்கப்பட்டு இருக்கின்ற தீர்ப்பு தேர்தல் ஆணையம் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றார்.