search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி, சசிகலா அ.தி.மு.க.-வில் மீண்டும் இணையத் தயார் - ஓ.பி.எஸ்.
    X

    எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி, சசிகலா அ.தி.மு.க.-வில் மீண்டும் இணையத் தயார் - ஓ.பி.எஸ்.

    • அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வுதான்.
    • அ.தி.மு.க. ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார்.

    தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. ஒன்றிணையாவிட்டால் நான் உள்பட அனைவருக்கும் தாழ்வுதான்.

    அ.தி.மு.க. யாரால் உருவாக்கி நிறுவி காப்பாற்றப்பட்டது என்பதை மனசாட்சியுடன் எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டும்.

    கழக சட்ட விதிப்படி ஜெயலலிதா கட்சியை நடத்தினார். அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர்கள் ஏற்பின் மூலமே பொதுச் செயலாளர் தேர்வு இருக்க வேண்டும் என்ற விதியை யாரும் மாற்ற முடியாது. ஜெயலலிதா அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். எந்த சட்டத்தை திருத்தக் கூடாது என்று இருந்ததோ அந்த விதியை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டார்.

    அ.தி.மு.க. ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையென்றால் ஆட்சிக்கு வந்திருப்போம்.

    அ.தி.மு.க. ஒன்றிணைந்துவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதுதான் நல்லது என்ற மனப்பான்மையோடு தான் நான் இருக்கிறேன்.

    எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்.

    டெல்லியில் நிலைமை என்ன ஆனது. 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ளது. பாரத பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

    தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் எதை விரும்புகிறார்களோ அதை அடிப்படை அ.தி.மு.க.வினர் செய்து காட்டுவார்கள்.

    திராவிட கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.

    Next Story
    ×