என் மலர்
தமிழ்நாடு

திருச்சி டிஐஜி வருண் குமார் மீதான வழக்கை விசாரிக்க ஆணை
- தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
- ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு
திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை உத்தரவிட்டுள்ளது.
பொய் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் தனது 2 செல்போன்களை பறித்ததாக திருச்சி டிஐஜி மீது சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
திருச்சி டிஐஜி வருண் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
ஜாமினில் வெளியான பின்னும் செல்போனை ஒப்படைக்காததால் வழக்கு தொடர்ந்த போது என் செல்போன் ஆடியோ லீக் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி டிஐஜி வருண் தனது பள்ளித்தோழரான திருச்சி சூர்யாவின் எக்ஸ் தளத்தில் ஆடியோவை பதிவேற்றம் செய்தார் என்றும் சாட்டை துரைமுருகன் கூறினார்.
மேலும் மனுவில், "நாதகவை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் 20 பெண் காவலர்களை கொண்டு தாக்கி சீமானுக்கு எதிராக வாக்குமூலம் பெற துன்புறுத்தல்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்துள்ளார்.
திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைவர், திருச்சி ஆணையருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, திருச்சி டிஐஜி வருண் மீதான புகாரை விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாம்தமிழர் கட்சியின் மீதும் ,என் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு சட்டவிரோத கைது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பொதுவெளியில் நாம்தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பும் திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நான் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு !
நீதி வெல்லும் !
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.