என் மலர்
தமிழ்நாடு
சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
- சீமானின் வீட்டை சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
- நாம் தமிழர் கட்சியினர் சீமான் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீமானின் அநாகரிக பேச்சை அடுத்து மோதல்களை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீமானின் வீட்டை சுற்றி 3 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் சீமான் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.
முன்னதாக, தந்தை பெரியார் குறித்து நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு ஆதாரம் வேண்டும் என்று தெரிவித்துள்ள த.பெ.தி.க. பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், இன்று காலை சீமான் வீட்டுக்கு சென்று ஆதாரத்தை கேட்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில்,
தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தந்தை பெரியார் குறித்து தீய நோக்கத்தோடு அவதூறு குற்றச்சாட்டு கூறுவதாகவும், சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் திராவிடர் விடுதலை கழகம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.