என் மலர்
தமிழ்நாடு
X
பொங்கல் பண்டிகை- கூடுதலாக 2 சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு
Byமாலை மலர்8 Jan 2025 1:35 PM IST
- ஏற்கனவே 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 2 ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 10ம் தேதி பெங்களூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல வசதியாக கூடுதலாக 2 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 10ம் தேதி மைசூரில் இருந்து சேலம், திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கும், மறு மார்க்கத்தில் 11ம் தேதி மைசூருக்கும் இயக்கப்படுகிறது.
10ம் தேதி பெங்களூரில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கும், மறு மார்க்கத்தில் அதே நாளில் பெங்களூருவுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
ஏற்கனவே 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பயன்பெறுவர்.
Next Story
×
X