search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிக்கான நீர்வரத்து குறைந்தது
    X

    செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிக்கான நீர்வரத்து குறைந்தது

    • நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டி இருந்தது.
    • பூண்டி ஏரி நீர்வரத்து குறைந்துள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர் வரத்து இன்று குறைந்ததால் ஏரியின் நீர்மட்டமும் சரிந்தது. மொத்த நீர்மட்டம் 24 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 22.90 அடியாக உள்ளது.

    நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டி இருந்தது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து இன்று விநாடிக்கு 3250 கனஅடியாக சரிந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    இதேபோல் பூண்டி ஏரி நீர்வரத்தும் குறைந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 10,300 கனஅடியாக உள்ளது. நீர் திறப்பு விநாடிக்கு 16,500 கனஅடி அடியாக உள்ளது.

    நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழையினால் நீர் நிரம்பியுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பியுள்ளதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    நீர் வெளியேற்றப்பட்டு வருவது தொடர்பான எச்சரிக்கை, நீர் வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

    இது முழுக்க முழுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தான். இதனை அரசு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் எந்தவிதமான அச்சமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை. கனமழை நேரத்தில், அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×