என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகள் நாளை செயல்படும்- தமிழக அரசு
- டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும்.
- பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க ஏதுவாக நாளை அனைத்து ரேசன் கடைகளும் செயல்படும்.
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை 9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 2.20 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டி உள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
அந்தந்த ஏரியாவில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வரும் டோக்கனில் எப்போது பொருட்கள் வாங்க வர வேண்டும் என்பதை நாள் நேரம் குறிப்பிட்டு எழுதி கொடுக்கின்றனர்.
டோக்கன் வழங்கும் பணியை 4 நாட்களுக்குள் முடித்து தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகள் மாதத்திற்கு இரண்டு வாரம் வெள்ளிக்கிழமையிலும், இரண்டு வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படாது.
இந்நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு ரேசன் கடைகள் நாளையும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க ஏதுவாக நாளை அனைத்து ரேசன் கடைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.