என் மலர்
தமிழ்நாடு
குடியரசு தினவிழா- வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்கினார் முதலமைச்சர்
- அடையாறு ஆற்றில் 3 பேர் உயிருக்குப் போராடி வருவதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
- வெற்றிவேல் எடுத்த துணிச்சலான நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, வீர தீரச் செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக் கங்களை வழங்கி வருகிறது.
இந்த பக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
கடந்த 12.11.2024 அன்று மாலை 5.40 மணி அளவில் அடையாறு எம்.ஜி.எம். மலர் மருத்துவமனை அருகே அடையாறு ஆற்றில் 3 பேர் உயிருக்குப் போராடி வருவதாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக முன்னணி தீயணைப்பாளர் கே. வெற்றிவேல் தலைமையில் மெரினா மீட்புக் குழுவும், அவசர கால மீட்பு ஊர்தியும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கே.வெற்றிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து ஆற்றில் இறங்கி ஆற்றில் சிக்கிய மக்களை பத்திரமாக மீட்டனர்.
வெற்றிவேல் எடுத்த துணிச்சலான நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரது திறமையான மீட்பு நடவடிக்கையின் மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆதிகேசவன் (வயது 42), குமார் (22), செல்வி (43) ஆகியோர் காப்பாற்றப்பட்டனர்.
தன்னலம் கருதாமல் துணிச்சலோடு தன் உயிரையும் துச்சமென நினைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவரது துணிச்சலான செயலை பாராட்டி கே.வெற்றிவேலுக்கு 2024-ம் ஆண்டிற்கான வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி அரசு சிறப்பித்தது.