search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசு தினம்- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு
    X

    குடியரசு தினம்- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு

    • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
    • வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை ஆயிரக் கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.

    நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையாட்டி நாடு முழுக்க கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

    இது மட்டுமின்றி பல்வேறு கலைநிகழ்ச்சிகள், காவல் துறை மற்றும் சிறப்பு படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மேலும் அரசியல் தலைவர்கள், முப்படை வீரர், வீராங்கனைகள், மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு அட்டாரி- வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்வை ஆயிரக் கணக்கான மக்கள் நேரில் கண்டு களித்தனர்.

    Next Story
    ×