என் மலர்
தமிழ்நாடு

X
2025-26 நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு
By
மாலை மலர்15 March 2025 11:40 AM IST

- இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
- நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
உழவர்களுக்காக இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்களில் தாக்கல் செய்தார்.
Next Story
×
X