என் மலர்
தமிழ்நாடு

தமிழக தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம்- ரெயில்வே அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

- உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது
- இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இரயில்வே தேர்வு வாரியத்தின் லோகோ பைலட் தேர்வுக்கு 6000. க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டுமென்று இரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
More than 6,000 candidates from Tamil Nadu are set to appear for the Railway Recruitment Board's loco pilot exam.For the majority of them, the exam center has been allocated over 1,500 kilometers away.I have written a letter to the Railway Minister requesting a change in… pic.twitter.com/LHqJPiWZ1a
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 15, 2025