search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்
    X

    உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்

    • உயிரிழந்தவர்கள் என்.எல்.சி.ஊழியராக இருந்த முத்துக்குமார், மனைவி தேவி, மகன் பிரவீன் என கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குளத்தில் தாய், மகன் உடல் மிதந்தது. குளத்துக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்தவர்கள் என்.எல்.சி.ஊழியராக இருந்த முத்துக்குமார், மனைவி தேவி, மகன் பிரவீன் என கூறப்படுகிறது.

    மனைவி, மகனை கொன்று முத்துக்குமார் தற்கொலையா செய்துகொண்டாரா? இவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×