search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
    X

    தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

    • ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் தண்ணீர் வடியாத காரணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.

    Next Story
    ×