என் மலர்
தமிழ்நாடு

நா.த.க.-விற்கு களை உதிரும் காலம்: காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

- மருத்துவம், கல்வி, எல்லா வரியையும் எடுத்துக்கொண்டால் எதற்கு மாநிலம் இருக்கிறது.
- ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டை கூறுபோட துடிக்கிறீர்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மும்மொழி ஏன் இருக்கிறது. எம் மொழி ஏன் இல்லை.
* கல்வி மாநில உரிமை. மருத்துவம், கல்வி, எல்லா வரியையும் எடுத்துக்கொண்டால் எதற்கு மாநிலம் இருக்கிறது. இதற்குத்தான் போராடி சுதந்திரம் பெற்றோமா?
* கட்சியில் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும் விருப்பமில்லை என்றால் வெளியேறுவதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது.
* இது ஜனநாயக அமைப்பு. தங்கை காளியம்மாள் முதலில் சமூக செயல்பாட்டாளராக தான் இருந்தார். அவரை அழைத்து வந்ததும் நான் தான். அவர்கள் எல்லோருக்கும் எல்லா சுதந்திரமும் உள்ளது.
* வரும்போது வாங்க வணக்கம். ரொம்ப நன்றி என்று சொல்வோம். போறதா இருந்தால் போங்க. ரொம்ப நன்றி. வாழ்த்துகள் என்று சொல்வோம். இதுதான் எங்கள் கொள்கை.
* பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருப்பதுபோல் எங்கள் கட்சிக்கு களைகள் உதிரும் காலம். திடீரென்று வருவார்கள் போவார்கள். என்ன இப்போது வெளியே போனால் நீங்கள் எல்லாம் கேள்வி கேட்பதால், பேட்டி எடுப்பதால் கடிதம் விலகுகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு போகிறார்கள்
* உடனே நீங்கள் பேட்டி எடுத்து போடுகிறீர்கள். அதுவும் பார்ப்பதற்கு, கேட்பதற்கு, ரசிப்பதற்கு நல்லா தான் இருக்கிறது. எடுத்து போடுங்கள்.
* தங்கைக்கு முழு சுதந்திரம் உள்ளது. கட்சியில் இருப்பதா? வேறு கட்சியில் சேர்ந்து இயங்குவதா? என்று முடிவு எடுக்கின்ற முழு உரிமை அவர்களுக்கு உள்ளது. அதில் நாம் ஒன்றும் சொல்ல முடியாது.
* ஒரு மொழியை திணித்து இந்த நாட்டை துண்டாடுகிறீர்கள். பிரிவினைவாதத்தை தூண்டுகின்ற பிரிவினைவாதிகள் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.
* ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டை கூறுபோட துடிக்கிறீர்கள்.
* அந்த நொடி எந்த நொடி. நிதி தரவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். என் மாநிலத்தில் இருந்து உனக்கு ஒரு ரூபாய் வரி வராது என்று சொல்ல முடியாதா? என்று கூறினார்.