search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திராவிட ஒழிப்பும், பெரியார் எதிர்ப்பும் எனது கொள்கை - சீமான்
    X

    'திராவிட ஒழிப்பும், பெரியார் எதிர்ப்பும்' எனது கொள்கை - சீமான்

    • பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.
    • பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.

    தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக புதுச்சேரியில் அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ் ஒரு காட்டுமிராண்டித்தனமான மொழி என்றால் நீங்கள் எழுதியது, பேசியது எந்த மொழியில்?

    * இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்று பேசியிருக்கிறார் பெரியார்.

    * திராவிடம் திராவிடம் என பேசி அதற்கு முன்வந்த பெரும் தலைவர்களை புறக்கணித்துள்ளனர்.

    * பார்ப்பனியரும் எதிரி, இஸ்லாமியர் வேறு நாட்டவர் என்றால் நீ யார், இடஒதுக்கீடு தவறு என கூறுவது எவ்வாறு?

    * பெரியார் குறித்து கடந்த காலங்களில் பேசியது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன்.

    * புத்தகங்களை படித்த பின்னர் தான் தற்போது தெளிவு பிறந்தது.

    * பிரபாகரனை பார்த்த பின்னர் தான் தமிழ் தேசியம் குறித்த தெளிவு பிறந்தது.

    * திராவிடம் என்றால் திருடர்கள் என்று பிற்காலங்களில் இருந்து தெரிய வந்தது.

    * திராவிடத்தை ஒழிப்பதும், பெரியாரை எதிர்ப்பதும் தான் எனது கொள்கை என்று கூறினார்.

    Next Story
    ×