search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று மாலை ஆஜராவேன்- சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இன்று மாலை ஆஜராவேன்- சீமான்

    • நான் எங்கிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எங்கும் தலைமறைவாகிவிடவில்லை.
    • ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்?

    தருமபுரி:

    தருமபுரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * என் மீதான வழக்கில் மட்டும் காவல்துறை இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?

    * நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் அளித்துள்ளது. ஆனால் மூன்றே நாளில் வழக்கை முடிப்பது போல் அவசரம் காட்டத்தேவையில்லை.

    * சம்மன் ஒட்டியதுடன் காவல்துறையினரின் பணி முடிந்துவிட்டது.

    * வீட்டில் ஆட்கள் இல்லாமல் இருந்திருந்தால் கதவில் சம்மன் ஒட்டலாம். எனது மனைவி இருந்தும் சம்மனை ஒட்டியது எதற்காக?

    * ஆட்கள் இல்லாதது போல் அழைப்பாணையை ஒட்டிவிட்டு போலீசார் செல்லலாம். ஆனால் நாங்கள் அதனை கிழிக்கக்கூடாதா?

    * கதவில் ஒட்டிய சம்மன் நான் படிக்கவா? பொதுமக்கள் படிக்கவா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யவா?

    * நீலாங்கரை காவல் ஆய்வாளர் அடித்து இழுத்து செல்ல வேண்டியது ஏன்?

    * நான் எங்கிருக்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும். எங்கும் தலைமறைவாகிவிடவில்லை.

    * ஒரே நேரத்தில் 4 சம்மன் அனுப்ப வேண்டியது ஏன்?

    * இன்று மாலை 6 மணிக்கு மேல் வளசரவாக்கம் காவல்நிலையம் செல்வேன் என்றார்.

    Next Story
    ×