என் மலர்
தமிழ்நாடு
வள்ளலார், வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்?- சீமான்
- பெண்ணுரிமையை பாதுகாத்த ஒரே தலைவர் பிரபாகரன் தான்.
- பெரியாரை பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?
சென்னை:
சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* உழவுக்கும் தனக்கும் உறவாக நின்ற மாடுகளுக்கு பண்டிகை வைத்து கொண்டாடிய மரபு தமிழர் மரபு.
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக நிற்கும்.
* பொங்கலன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
* பொங்கலன்று யுஜிசி தேர்வை நடத்தும் மத்திய அரசு வட இந்திய பண்டிகைகளின்போது தேர்வு நடத்துமா?. தமிழ்நாட்டில் கேட்க ஆளில்லாததால் மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது.
* தி.மு.க.வுக்கு வாக்கு செலுத்தி இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்.
* பார்ப்பனர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு அவர்களுடன் கூட்டு வைத்தது யார்?
* வள்ளலார், வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்?
* பெரியார் தான் சமூகநீதியை நிலைநாட்டினார் என்றால் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. ஏன் போராடுகிறது?
* ஆதாரத்தை வைத்து பூட்டி வைத்துக்கொண்டு ஆதாரத்தை தா என்றால் எங்கே போவது?
* பெரியாரை பற்றி பேசி தேர்தலில் ஓட்டு கேட்க எந்த கட்சியாவது தயாரா?
* பெண்ணுரிமையை பாதுகாத்த ஒரே தலைவர் பிரபாகரன் தான்.
* தடை செய்யப்பட்ட புலிகளையும், பிரபாகரனையும் பேசி 32 லட்சம் ஓட்டு வாங்கி உள்ளேன் என்று கூறினார்.