search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
    X

    ஈரோட்டில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு

    • புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
    • இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா பவர் திறப்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எதிர்ப்பதோடு, இந்திய அரசையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    இந்த பேச்சு இந்திய அரசுக்கு எதிராக மக்களை தூண்டுகிற வகையில் இருப்பதாக கூறி வடகிழக்கு மாகாணமான அசாம் மாநிலம், கவுகாத்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாயக விரோத பாசிச அடக்குமுறை செயலாகும்.

    இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இன்று மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    நாளை காலை 11 மணியளவில் ஈரோடு மாநகரில் எனது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலம், தலைவர் ராகுல் காந்தி மீது தொடுத்திருக்கும் பா.ஜ.க. அரசின் அடக்குமுறையை முறியடிக்க, இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் திரண்டு வரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    Next Story
    ×