என் மலர்
தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

- திமுக ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர்.
- மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பாலியல் வன்கொடுமைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இப்பொழுது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியைபோல இல்லாமல் இந்த ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையால்தான் பெண்கள் தைரியமாக புகார் தருகின்றனர்.
இதற்கு முன் மாணவிகள் அச்சம் உணர்வோடு இருந்தார்கள். யாரிடம் சொல்வது, சொன்னால் ஆசிரியர் தனது மதிப்பெண்களை குறைத்து விடுவாரோ என்ற பயம் இருந்தது.
இப்போது மாணவிகளுக்கு தைரியம் வந்து இருக்கிறது. மாணவிகள் மத்தியில் அச்சம் நீங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இ.பி.எஸ்., அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை. இ.பி.எஸ்.,க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது.
குற்றங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து இருக்கிறது.
இவ்வாறு கூறினார்.