search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கபடி வீராங்கனைகள் உடலில் காயங்களுடன் நாளை வரை ரெயிலுக்கு காத்திருக்க வேண்டுமா?: ஜெயக்குமார் கண்டனம்
    X

    கபடி வீராங்கனைகள் உடலில் காயங்களுடன் நாளை வரை ரெயிலுக்கு காத்திருக்க வேண்டுமா?: ஜெயக்குமார் கண்டனம்

    • தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!

    பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:-

    உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா?

    டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா?

    இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா?

    கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!

    விசாரணை என்ற பெயரில் பயிற்சியாளர் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

    வீராங்கனைகளையும் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

    எனவே உடனடியாக அனைத்து வீராங்கனைகளையும் மீட்டு வந்து இங்கு உயரிய மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவம் அளிக்க வேண்டும்.

    விமான பயணத்திற்கான கட்டணத்தை கூட நாங்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்!

    மீட்பதற்கு அரசு தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×