search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கையெழுத்து இயக்கம்- பா.ஜ.க.வை சார்ந்த 10 பேரை நிற்க வைத்துக்கொண்டு.. தமிழிசைக்கு சேகர்பாபு சரமாரி கேள்வி
    X

    கையெழுத்து இயக்கம்- பா.ஜ.க.வை சார்ந்த 10 பேரை நிற்க வைத்துக்கொண்டு.. தமிழிசைக்கு சேகர்பாபு சரமாரி கேள்வி

    • கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள்.
    • தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.

    மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை கே.கே.நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பா.ஜ.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்த நேற்று திட்டமிட்டனர். இதற்கிடையே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    அங்கு தமிழிசை சவுந்தரராஜன் வந்து மக்களிடம் கையெழுத்து பெறும் பணியில் ஈடுபட முயன்றார். உடனே போலீசார், அவரை தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,

    தமிழிசையின் கையெழுத்து இயக்கத்தை பற்றி சொல்வது என்றால், நேற்று அவர் நடந்துகொண்ட நடவடிக்கையை நிச்சயம் அவர் தந்தை குமரி அனந்தன் பார்த்திருந்தால் மிகுந்த வருத்தப்பட்டு இருப்பார். துயரம் அடைந்து இருப்பார்.

    இவருக்கா போய் நாம் தமிழிசை என்று பெயர் வைத்தோம் என்று மிக மிக வருத்தத்தோடு இருந்து இருப்பார்.

    கையெழுத்து இயக்கம் என்பது இல்லங்கள் தோறும் சென்று வாங்குவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் எந்த இல்லத்திற்கு சென்று வாங்கினார்கள். அவர்களை சுற்றி பா.ஜ.க.வை சார்ந்த 10 பேரை நிற்க வைத்துக்கொண்டு, ஊடகங்களில் அவர் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அவர் எண்ணி இருந்த பதவிகள் எதுவும் கிடைக்காததால், அந்த கையெழுத்து இயக்கத்தை அவர்களுடைய இயக்கத்தை சார்ந்த தோழர்களை வைத்து நடத்திக்கொண்டார்.

    அதோடு அவர் காலாவதி என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருக்கிறார்.

    காலாவதி ஆனவர் யார்? புதுச்சேரியில் காலாவதி ஆனவர், தென்சென்னை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வால் காலி செய்யப்பட்டவர் எங்களை பார்த்து காலாவதி என்கிறார்.

    அவரை காலாவதி ஆக்குவதற்கும், அவர் சார்ந்த இயக்கத்தை காலாவதி ஆக்குவதற்கும் தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில் தயாராக இருக்கிறார்கள் என்பதை அக்கா தமிழிசைக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×