search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் காளை மற்றும் அதன் உரிமையாளர் உயிரிழப்பு
    X

    சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் காளை மற்றும் அதன் உரிமையாளர் உயிரிழப்பு

    • சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 117 காயமடைந்தனர்.
    • காயமடைந்த 27 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட மாடும் மாட்டின் உரிமையாளரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மாடு தென்கரை கண்மாய் அருகில் சென்ற போது உரிமையாளர் அதனை பிடிக்க முயன்றுள்ளார்.

    மாடு கண்மாயில் விழுந்த நிலையில் அதனை காப்பாற்ற முயன்ற உரிமையாளர் ராஜா தாமரை கோடியில் கால் சிக்கி பலி

    தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கண்மாயில் மிதந்த மாடு, அதன் உரிமையாளர் ராஜாவின் உடலை மீட்டனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் காயமடைந்த 117 நபர்களில் 27 பேர் மேல் சிகிச்சைக்கா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×