என் மலர்
தமிழ்நாடு

இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம்- வருத்தம் தெரிவித்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

- நான் பேசிய கருத்தை இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர்
- காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, "இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நான் பேசிய கருத்தை வேறுவிதமாக சிலர் இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை; என் பேச்சில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்ததை பதிவு செய்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
என் அன்பு இஸ்லாமிய உறவுகளே...நான் பேசிய கருத்தை வேறுவிதமாக எதிர்க்கட்சிகள் திரித்து பரப்புகின்றனர்.நான் பயன்படுத்திய வார்த்தை உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்? pic.twitter.com/i4l3YXuDfS
— Sivaji Krishnamurthy (@Sivajikm_offl1) March 16, 2025