என் மலர்
தமிழ்நாடு
ஞாயிற்றுக்கிழமை மதுரை To சென்னை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்
- சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் பயணம்.
- ஞாயிறன்று அதிக அளவில் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். வருகிற சனிக்கிழமையில் இருந்து சென்னை திரும்புவார்கள். முக்கியமாக ஞாயிறன்று அதிக அளவில் சென்னை திரும்புவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் மக்கள் சென்னை திரும்புவதால் ரெயில், பேருந்துகளில் கட்டுக்கடங்காத வகையில் கூட்டம் ஏற்படு வாய்ப்புள்ளது.
இதை கருத்தில் கொண்டு தென்னக ரெயில்வே ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்குகிறது.
தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில் "பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும். திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்" எனத் தெரிவித்துள்ளது.