search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி-தாம்பரம் இடையே 19-ந்தேதி சிறப்பு ரெயில்- முன்பதிவு     தொடங்கியது
    X

    தூத்துக்குடி-தாம்பரம் இடையே 19-ந்தேதி சிறப்பு ரெயில்- முன்பதிவு தொடங்கியது

    • பயணிகள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் 7 இணைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 9 நாட்கள் வரை விடுமுறை இருப்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வந்துள்ளனர்.

    மீண்டும் அவர்கள் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பணிபுரியும் ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி பயணிகள் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி -தாம்பரம்(வண்டி எண்:06168) ரெயில் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகள் 7 இணைக்கப்பட்டுள்ளது. 6 படுக்கை வசதி பெட்டிகள் உள்ளது. அதேநேரம் இந்த ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் எதுவும் கிடையாது.

    Next Story
    ×