search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மண்டபம் - சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    மண்டபம் - சென்னை எழும்பூருக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

    • மண்டபத்தில் இருந்து நாளை இரவு 10 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
    • இந்த ரெயிலில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (எண்: 06048) இயக்கப்பட உள்ளது. மண்டபத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த ரெயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×