search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    த.வெ.க-ல் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை- புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை
    X

    த.வெ.க-ல் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை- புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

    • விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆடியோ பரவியது.
    • மாவட்ட அளவிலான நிர்வாககள் பதவிகளில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என விஜய் அறிவுரை.

    தமிழக வெற்றிக் கழகத்தில், பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆடியோ பரவியது.

    மேலும், பணம் இருந்தால்தான் தவெகவில் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் பேசக்கூடிய ஆடியோக்கள் தவெக குழுக்களில் பகிரப்பட்டு வந்தது.

    இந்நிலையில், பனையூரில் தவெக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் கூட்டத்தில், மாவட்ட அளவிலான நிர்வாககள் பதவிகளில் எந்தவித சமரசமும் இன்றி முறையாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

    Next Story
    ×