என் மலர்
தமிழ்நாடு
'இசை முரசு' நாகூர் ஹனிபாவுக்கு தமிழக அரசு கவுரவம்
- 1925 டிசம்பர் 25ல் பிறந்த நாகூர் ஹனிபா தனது 89-வது வயதில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி மறைந்தார்.
- இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டுமென சட்டமன்றப் பேரவையில் குரல் எழுப்பினேன்.
நாகூர் இஸ்மாயில் முஹமது ஹனிபா.திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட ஹனிபாவுக்கு அவரது குரலே மிகப்பெரிய அடையாளம். தி.மு.க. மீது பற்றுக் கொண்ட இவர் "இசை முரசு" என்றும் பலரால் அன்போடு அழைக்கப்படுகின்றார்.
1953-ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதையில் வெளியான 'நாம்' படத்தில் நாட்டுக்கூத்துப் பாணியில் இயற்றப்பட்ட பலர் சேர்ந்து பாடிய ஒரு பாடலில் நாகூர் ஹனிபாவும் இணைந்து பாடினார். இதுவே இவரது முதலாவது திரையுலகப் பங்களிப்பாகும். இதை தொடர்ந்து பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 'இறைவனிடம் கையேந்துங்கள்', 'எல்லோரும் கொண்டாடுவோம்', 'நட்ட நடு கடல் மீது', 'உன் மதமா என் மதமா', 'நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்' போன்ற பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தவையாகும்.
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் 1925 டிசம்பர் 25ல் பிறந்த நாகூர் ஹனிபா தனது 89-வது வயதில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி மறைந்தார். இதையடுத்து நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டை அரசு சார்பில் கொண்டாடப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.ஆளூர் ஷாநவாஸ் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், நாகூர் ஹனிபா நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமைய உள்ள பூங்காவுக்கு 'இசை முரசு' ஹனிபா பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கு, நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் நன்றி தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் குரல் எழுப்பினேன். முதலமைச்சர் அவர்களிடம் நேரிலும் வலியுறுத்தினேன். அந்த அடிப்படையில், இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைமுரசு அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக, நாகப்பட்டினம் நாகூர் நகரில் அமைந்துள்ள தைக்கால் தெருவிற்கு "இசைமுரசு நாகூர் ஹனிபா தெரு" என்றும், நாகூர் சில்லடி கடற்கரையில் புதிதாக அமைய உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவிற்கு "இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா" என்றும் பெயர் சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார்.
எமது கோரிக்கையை ஏற்று, இசைமுரசு அவர்களுக்கு சிறப்பு செய்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி! என பதிவிட்டுள்ளார்.
இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டை அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கடந்த ஆண்டு சட்டமன்றப் பேரவையில் குரல் எழுப்பினேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரிலும் வலியுறுத்தினேன். அந்த அடிப்படையில், இசைமுரசு நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு தொடங்கவுள்ள நிலையில்,… pic.twitter.com/YzbqZlzSEE
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) December 18, 2024