என் மலர்
தமிழ்நாடு

ஜனாதிபதியை சந்திக்க தமிழக அரசு திட்டம்?

- அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.
- அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பா.ஜ.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. அதே நேரத்தில், அ.தி.மு.க., அ.ம.மு.க., தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து, இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஜனாதிபதியிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.