என் மலர்
தமிழ்நாடு
கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தஞ்சை வருகை
- தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பிரதோஷ விழாவில் பங்கேற்கிறார்.
- விழா முடிந்தவுடன் காரில் புறப்பட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வருகிறார்.
தஞ்சாவூர்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (புதன்கிழமை) தஞ்சாவூருக்கு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சாவூருக்கு வருகிறார்.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில் தஞ்சை சரசுவதி மகாலுக்கு செல்கிறார். அங்கு ஓலைச்சுவடிகள், அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்.
இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மாலை 4 மணி அளவில் தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் பிரதோஷ விழாவில் பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் காரில் புறப்பட்டு மீண்டும் சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு நாளை தஞ்சாவூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.