search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    • திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும்.
    • கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    சென்னை:

    திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதாக கடந்த 10-ந்தேதி தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இதனால் பல்வேறு ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் வழித்தடத்தில் மேற்கொள்ள இருந்த பராமரிப்பு பணி ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்.22671), மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22672) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * குருவாயூரில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * செங்கோட்டையில் இருந்து வரும் 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16340), உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து வரும் 29-ந்தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16368) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து வரும் 28-ந் தேதி காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயிலும் (12666), நாகர்கோவிலில் இருந்து வரும் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16354) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * நாகர்கோவிலில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16321), மறுமார்க்கமாக கோவையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16322) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    * ஈரோட்டில் இருந்து வரும் 27, 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16845). மறுமாா்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16846) வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×