என் மலர்
தமிழ்நாடு

ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது- திருமாவளவன்

- சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.
- வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்னை:
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
* ஆங்கிலம் மற்றும் தாய்மொழி என்ற இருமொழிக்கொள்கை இந்தியா முழுவதும் போதுமானது.
* அரசே ஒரு மொழியை திணிப்பது எதிர்காலத்தில் ஒரே தேசம் ஒரே மொழியை உருவாக்குவதற்கான சதி, சூழ்ச்சி.
* சூழ்ச்சியை முறியடிக்க மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறோம்.
* தி.மு.க. கூட்டணி உடையும் என்பது ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது நிறைவேறாது என அவருக்கே தெரியும்.
* தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது.
* தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம், மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைக்காக பேசுவோம், போராடுவோம்.
* வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
* அனைத்து கட்சி கூட்டத்தை மறுக்கிற கட்சியினரின் கருத்து ஏற்புடையதா இல்லை.
* இந்தியை படிக்க வேண்டும் என பா.ஜ.க.விற்கு ஆதரவாக பேசுவது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கானது என்றார்.