search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது- திருமாவளவன்
    X

    வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது- திருமாவளவன்

    • சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.
    • சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.

    சென்னை:

    சென்னை மூலக்கொத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    * வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம்.

    * சிபிசிஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வேங்கைவயலில் போராட்டம் நடத்திய கிராமத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் அச்சுறுத்தி கைது செய்துள்ளனர்.

    * சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.

    * சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.

    * தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.

    * தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே விடுதலை சிறுத்தைகள் பார்க்கிறது, கண்டிக்கிறது என்றார்.

    Next Story
    ×