என் மலர்
தமிழ்நாடு

திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்- திருமாவளவன்

- பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
- அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.
சென்னை:
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று முதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன்.
விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன். விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற…
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 3, 2025