என் மலர்
தமிழ்நாடு

X
கடலோர பகுதிகளில் பலத்த காற்று- தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
By
Maalaimalar11 March 2025 10:36 AM IST

- தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வேம்பார் ஆகிய கடற்கரையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் மற்றும் வேம்பார் ஆகிய கடற்கரையோரத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Next Story
×
X