என் மலர்
தமிழ்நாடு

X
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் தொடங்கியது
By
மாலை மலர்18 March 2025 10:33 AM IST

- அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
- டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் அமர்வு தொடங்கியது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.
அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
சட்டசபையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் டி.கருப்புசாமிக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
Next Story
×
X