search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்
    X

    சட்டசபையில் ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்

    • வறுமையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.

    சட்டசபையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்ட நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவர் உரையில் கூறியதாவது:

    * பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 60 சதவீதம்.

    * ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை.

    * வறுமையை முற்றிலும் ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    * மிகவும் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * பால் கொள்முதல் விலை 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.

    * மீனவர்கள் உரிமையை பாதுகாக்க அரசு முழு முனைப்பு கொண்டுள்ளது.

    * இலங்கையில் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து வலியுறுத்தல்.

    * தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

    * கிராமப்புற சாலை வசதி திட்டத்தின் மூலம் ரூ.4,000 கோடியில் 9,653 கி.மீ. சாலைகள் சீரமைப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×