என் மலர்
தமிழ்நாடு
TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..

- நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
- 2025-26 பட்ஜெட் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார்.
மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்..
மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள்:
ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1 சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும்.
மகளிருக்கு 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் முனைவோர் கடன் வழங்கப்படும்.
பெண்களின் பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் உரிமை தொகைக்கு ரூ.8,597 கோடி வழங்கப்படும். சமூக நலன் மகளிர் உரிமை தொகைக்கு ரூ.8,597 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு மானியமாக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கருப்பைவாய் புற்று நோயை தடுக்க 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் செயல் படுத்தப்படும். இதற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்:
அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2000 கோடியில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
சமக்ரசிக்சா திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்றாலும் தமிழக மாணவர்களின் கல்வியில் ஒரு துளிகூடபாதிப்பு இருக்காது.
அண்ணா பல்லைக்கழகத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
அரசு பொறியியல் கல்லூரிகளில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் சார்ந்த புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும். திறன்மிகு வகுப்பறை, நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பை ஏற்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கப்படும். உயர்க்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப்பாடத்தில் சதுரங்கத்தை சேர்த்து உடற்கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் குன்னூர், நத்தம், சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர் உள்ளிட்ட 10 இடங்களில் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
மருத்துவத் துறை முக்கிய அறிவிப்புகள்:
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறைக்கு ரூ.21,906 கோடி நிதி ஒதுக்கீடு.
நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் புற்று நோய், இருதய நோய் சோதனை மேற்கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு.
புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகளை வாங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்று நோய் மருத்துமனையை தரம் உயர்த்த ரூ.120 கோடி ஒதுக்கப்படும்.
தொழிற்துறை முக்கிய அறிவிப்புகள்:
புதிய 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
செமி கண்டக்டர் உயர்திறன் தொழில் மையம் ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்படும்.
ஒசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும். விருது நகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
மதுரை, மேலூர், கடலூரில் காலணி தொழிற்பூங்கா ரூ.250 கோடியில் அமைக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
தொழில் முதலீடு ஊக்கு விப்பு துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.
10 லட்சம் சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்படும்.
விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நிதி ஒதுக்கப் படும்.
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,918 கோடி ஒதுக்கப்படும்.
நீர்வளம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள்:
கோவை, திருச்சி, மதுரை சேலம், நெல்லையில் துணை திறன்மிகு மையங்கள் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டு திட்டம் ரூ.2 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.
வெள்ள நீரை சேமிக்கும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் ரூ.350 கோடியில் 3010 ஏக்கரில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
நீர்வளத் துறைக்கு ரூ.9,460 கோடி ஒதுக்கப்படும்.
திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரன்பட்டினம், சாமியார்பேட்டை, கீழ்புதுப்பட்டு கடற்கரைக்கு நதி நீலக் கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதர முக்கிய அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் வெள்ளி மலை, ஆழியாறு பகுதிகளில் ரூ.11,721 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 புனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கப்படும்.
வேட்டை பறவை வாழிடங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் அறிவியல் மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையம் உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப் படும்.
ஆன்லைன் டெலிவரியில் ஈடுபடும் தற்சார்பு தொழிலாளர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
அரசு அலுவலர்களின் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டு 15 நாட்களாக நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சம் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பண பலன் பெறலாம்.
Live Updates
- 14 March 2025 10:15 AM IST
மகளிர் உரிமை தொகை பெறாத தகுதிபெற்ற மற்ற மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை பெற விரைவில் நடவடிக்கை- அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:12 AM IST
பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:10 AM IST
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:09 AM IST
7 மாவட்டங்களில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ரூ. 6,668 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:08 AM IST
சென்னைக்கு அருகே உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:03 AM IST
பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 10:01 AM IST
முதல்வரின் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 2,100 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 9:57 AM IST
தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும். பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 9:56 AM IST
தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
- 14 March 2025 9:54 AM IST
இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து தான் தொடங்க வேண்டும். தமிழின் தொன்மை தொடர்ச்சியை அறிய மதுரையில் உலகத் தமிழ் கண்காட்சி மையம் அமைக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு