என் மலர்
தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும்

- ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
சென்னை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அவை கூடியதும் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2.40 மணி நேரம் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையில் வெளியான அறிவிப்பில் சில:-
* அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் முறை மீண்டும் செயல்படுத்தப்படும். அதன்படி, அரசு ஊழியர்கள் 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறலாம். சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குவதன் மூலம் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்.
* மகளிர் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திப்பதிவுகளுக்கு இது பொருந்தும்.
* ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க ரூ.225 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.